தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி எப்போது… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..! TN Schools Reopen Important Discussion 2024

TN Schools Reopen Important Discussion 2024

கோடை விடுமுறை

தமிழ்நாட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் முன்கூட்டியே பள்ளிகளுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல் 1 முதல் 3ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும், 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

சூப்பர்வைசர், தொழில்நுட்ப ஆய்வாளர் வேலைவாய்ப்பு; மத்திய அரசுப் பணி, உடனே அப்ளை பண்ணுங்க..!

இதற்கிடையே தான் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பது தொடர்பான தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலை உள்ளது. அதோடு மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி என்ன? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.

TN Schools Reopen Important Discussion 2024
TN Schools Reopen Important Discussion 2024
ஆலோசனை கூட்டம்

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி குறித்து தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா அவர்கள் தலைமையில்22.05.2024 ஆலோசனை கூட்டத்தில் மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் பள்ளிகள் திறந்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்

விரைவில் பள்ளி திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment