தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம் – மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி..! TN Schools Reopen 2024 Again Changed By Education Dept

TN Schools Reopen 2024 Again Changed By Education Dept

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தது.மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, கோடை வெயிலின் தாக்கத்தால் பீகாரில் பள்ளி மாணவிகள் மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருக்கிறது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

LIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; 500 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்..!

TN Schools Reopen 2024 Again Changed By Education Dept
TN Schools Reopen 2024 Again Changed By Education Dept

இதையடுத்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6 ஆம் தேதிக்கு பதில் ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Comment