பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… பள்ளி கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு..! TN Schools New Aadhar Registration 2024 Check Now

TN Schools New Aadhar Registration 2024

தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து இயல்பு நிலை திரும்பிய நிலையில் ஜூன் 6 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டதால், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஏற்கனவே புதுச்சேரி அரசு அங்குள்ள பள்ளிகள் ஜூன் 10 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில், தற்போது இதனை தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வி துறையும் ஜூன் 6 ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10 ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பள்ளி கல்வித் துறை ஒரு அறிவிப்பை வெளியுட்டுள்ளது

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

1318 காலிப் பணியிடங்கள்; 10th, 12th, டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – மறக்காமல் அப்ளை பண்ணுங்க..!

TN Schools New Aadhar Registration 2024
TN Schools New Aadhar Registration 2024
ஆதார் பதிவு திட்டம்

பள்ளிகள் திறக்கும் தேதியன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஆதார் பதிவு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “பள்ளிக்கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு

‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கும், புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளுக்கும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தைக் (எல்காட்) கொண்டு செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment