தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… பள்ளி கல்வித் துறை சூப்பர் அறிவிப்பு..! TN School Students EMIS Info 2024 Check Now

TN School Students EMIS Info 2024

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. அதில் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் திறன்களை மேம்படுத்தி கொள்ளும் வகையில் கல்வியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

பாதுகாப்பு உதவியாளர் வேலைவாய்ப்பு; 10th தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!

TN School Students EMIS Info 2024
TN School Students EMIS Info 2024
புதிய இணையத் தளம்

தற்போது, “Department of School Education” என்ற பெயரில் புதிய இணையத் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணிற்கு நேரடியாக வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் செய்யப்படும். இதில், ஏ டூ இசட் என்று சொல்லும் வகையில் பள்ளிக்கு மாணவர்கள் வருகை புரிவது முதல் தேர்ச்சி பெற்று வெளியே செல்வது வரை அனைத்து விவரங்களும் பெற்றோர்களுக்கு பகிரப்படும்.

வாட்ஸ்-அப்

எனவே நல்லதொரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். அதில் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சேவைகளையும் பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது அப்டேட்களை பார்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி பெற்றோர்களின் தொலைபேசி எண்களை வாங்கி எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. எமிஸ் (EMIS) என்பது கல்வி மேலாண்மை தகவல் முகமை.

வகுப்பறையில் ஆசிரியர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? பாடத்தை எப்படி கவனிக்கிறார்கள்? அசைன்மென்ட்களை எவ்வளவு நேரத்தில் முடிக்கிறார்கள்? ஒழுக்கம் எப்படி இருக்கிறது? வருகைப் பதிவேடு விவரங்கள்? பள்ளிக்கு வரும் நேரம்? தேர்வில் பெறும் மதிப்பெண்கள் எவ்வளவு? போன்ற விவரங்களை உடனுக்குடன் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம்.

2 thoughts on “தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… பள்ளி கல்வித் துறை சூப்பர் அறிவிப்பு..! TN School Students EMIS Info 2024 Check Now”

Leave a Comment