சுடும் வெயில்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 3-வது வாரம் வரை தள்ளி வைக்கப்படுமா? TN School Reopen to Extend till June 3rd Week 2024

TN School Reopen to Extend till June 3rd Week 2024

TN School Reopen to Extend till June 3rd Week 2024 தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி புதிய கல்வியாண்டையொட்டி பள்ளிகள் திறக்கப்படும்.இந்த ஆண்டு மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோடை மழைக்குப் பிறகு தமிழகத்தில் 28ஆம் தேதியிலிருந்து வெயில் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

1318 காலிப் பணியிடங்கள்; 10th, 12th, டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – மறக்காமல் அப்ளை பண்ணுங்க..!

TN School Reopen to Extend till June 3rd Week 2024
TN School Reopen to Extend till June 3rd Week 2024
பள்ளிகள் திறப்பு: 

TN School Reopen to Extend till June 3rd Week 2024 இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் இந்தாண்டு 6ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் பத்தாம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அலை வீசி வருவதன் காரணமாக, மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அரசாங்கமே வெளியில் செல்ல வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. பொதுவாக, வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை தாண்டும்போது அதனை வெப்பஅலை என்று சொல்வார்கள். இந்த அளவையும் தாண்டி, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெப்பஅலை வீசிக் கொண்டிருக்கிறது.

அதிக வெப்பம்: 

நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கடலூர், பரங்கிப்பேட்டை, திருத்தணி, ஈரோடு, தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வெப்ப அலை 38 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக வீசி இருக்கிறது. சென்னையில் மட்டும் 41.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப அலை வீசி இருக்கிறது. அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து இருக்கிறது. ஓரிரு இடங்களில் மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஜூன் மூன்றாவது வாரம்

தற்போது தமிழ்நாடு முழுவதும் நிலவும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் மூன்றாவது வாரத்தில் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

Leave a Comment