தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது – வெளியான முக்கிய தகவல்..! TN School Reopen Important Announcement 2024

TN School Reopen Important Announcement

பொதுத்தேர்வு

தமிழகத்தில் மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

கோடை விடுமுறை

அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதனை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைப்பெற்றது அதனால் கோடை விடுமுறை இந்தாண்டு கூடுதலாக கிடைத்துள்ள விடுமுறை நாட்களை மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

உடனே அப்ளை பண்ணுங்க, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை..!

TN School Reopen Important Announcement
TN School Reopen Important Announcement

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மே மாதத்தில் விடப்பட்டு, மீண்டும் ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், “இந்த மாத தொடக்கத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகளை திறப்பு சற்று தாமதமாக ஜூன் 2-வது வாரத்தில் திறக்க முதலில் திட்டமிட்டோம். ஆனால், கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் இன்னும் ஒருவாரம் வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மே 27-ம் தேதி

இதனால் தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் முதல் வாரத்திலேயே தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பள்ளிகளை திறக்க பரிசீலித்து வருகிறோம். இதுசார்ந்த ஆலோசனைக் கூட்டம் வரும் மே 27-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போதைய சூழல்களை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளனர்

Leave a Comment