விடுமுறை முடிய போகுது… பள்ளி விடுமுறை நீடிக்க வாய்ப்பு இருக்கா… மாணவர்களுக்கு இன்ப செய்தி..! TN School Reopen 2024 may extend

TN School Reopen 2024 may extend
பொதுத் தேர்வு

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

வேளாண் துறை வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும், தேர்வு கிடையாது – அப்ளை பண்ணுங்க சூப்பர் சான்ஸ்..!

TN School Reopen 2024 may extend
TN School Reopen 2024 may extend
கோடை விடுமுறை

வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

பள்ளி கல்வித் துறை

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி (06.06.2024) அன்று பள்ளிகள் திறக்கப்படும்.

எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது எனவே கோடை விடுமுறை நீட்டிக்கப்படாது

Leave a Comment