தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..? மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! TN School Reopen 2024 Happy News for School Students

TN School Reopen 2024 Happy News for School Students
பொதுத் தேர்வு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதியும் 10ம் தேதியும் வெளியிடப்பட்டது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

இந்திய ரயில்வே தொழிற் சாலையில் வேலைவாய்ப்பு – யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்..!

TN School Reopen 2024 Happy News for School Students
TN School Reopen 2024 Happy News for School Students
மாணவர்கள் சேர்க்கை

இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்தது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதால் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டது. 

பள்ளிகள் திறப்பு

இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். அதாவது ஜூன் 6ம் தேதி வியாழன் கிழமை பள்ளி துவங்கினால் அடுத்து ஒரு நாள் தான் பள்ளி இயங்கும் என்பதால், ஜூன் 10ம் தேதி அதாவது திங்கள்கிழமை முதல் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.  

இதனால் பள்ளி திறப்பு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

4 thoughts on “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா..? மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! TN School Reopen 2024 Happy News for School Students”

  1. இருக்கிற ஆனல் காத்துல ஸ்கூல் திறந்தா குழந்தைகள் மூச்சி விடவே சிர மப் படுவார்கள். அதுவும் எல்லா குழந்தைகளும் ஒன்றாக உட்கார வைக்கும் போது. ஐயோ நினைத்தாலே பயமா இருக்கு

    Reply

Leave a Comment