தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள முக்கிய அப்டேட்..! TN School Education Dept Informs EMIS Updtion 2024 Check Now

TN School Education Dept Informs EMIS Updtion 2024
தமிழகத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் அடித்துவிட்டு வெளியில் சென்று சுற்ற முடியாத அளவுக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பெற்றோரை இணைத்து வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது

அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை பள்ளிக்கல்வித்துறை  EMIS அப்டேட் செய்ய சேகரித்து வருகிறது . அத்துடன் பெற்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு ஓடிபி எண்களையும் கேட்டு வருகிறது. அதனால் பெற்றோர் சந்தேகம் அடைந்து ஓடிபி எண்களை சொல்ல மறுக்கின்றனர். 

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

வேளாண் துறை வேலை; மாதம் ரூ 67,700 சம்பளம் – சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!

TN School Education Dept Informs EMIS Updtion 2024
TN School Education Dept Informs EMIS Updtion 2024
ஓடிபி எண்கள்

எனவே, ஓடிபி எண்கள் பெறுவது மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை பெற்றோருக்கு தெரிவிப்பதற்காகவே என்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விளக்கம் அளித்த பிறகு, தற்போது பெற்றோர் தாங்களாகவே முன்வந்து ஓடிபி எண்களை சொல்லி தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவரையும் பள்ளிக் கல்வித்துறையும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கண்காணிக்க முடியும் என்ற நிலை உருவாகிவருகிறது. பள்ளிக்கு இன்று மாணவர் வரவில்லை என்றால் அந்த தகவல் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படும். மேலும், பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் செய்து விட்டு வெளியில் சென்று விட்டாலும் அந்த விவரங்களும் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்படும்

வாட்ஸ் ஆப்

இதற்காக பெற்றோர் எண்களை இணைத்து பிரத்யேகமாக ஒரு வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்த குழுவில் இணையும் பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகள் ஒவ்வொரு தேர்விலும் பெறும் மதிப்பெண்கள், பாடங்களை கற்கும் விதம் குறித்த விவரங்களும் அனுப்பி வைக்கப்படும்.  இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரையில் 1 கோடியே 35 லட்சம் பேர் செல்போன்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment