தமிழக பள்ளிகள் திறப்பு… சற்று முன் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..! TN Govt Announces Using of Old Bus Pass 2024

TN Govt Announces Using of Old Bus Pass 2024

பள்ளிகள் திறப்பு

TN Govt Announces Using of Old Bus Pass 2024 தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும், தேர்வு இல்லை..!

TN Govt Announces Using of Old Bus Pass 2024
TN Govt Announces Using of Old Bus Pass 2024
இலவச பஸ் பாஸ்

அரசு மற்றும் அரசால் அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிக்கூடங்களில் 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரசு கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கும், மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வருவதற்கும் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

மேலும் பள்ளிகள் திறந்த உடனே மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்குவது சாத்தியமில்லாத சூழலில், மாணவர்கள் சேர்க்கை முடிந்த பிறகு, புதிதாக இலவச பாஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை மாணவர்கள், தங்களுடைய பள்ளி அடையாள அட்டை அல்லது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை பேருந்துகளில் காண்பித்து பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு விரைந்து பாஸ் வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகள் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், மாணவர்களின் விவரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் பாஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment