மீண்டும் தள்ளி போகிறதா, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ? முழு விவரங்கள் Schools in Tamilnadu Reopen May Extend

Schools in Tamilnadu Reopen May Extend

வெப்பத்தின் தாக்கம்

Schools in Tamilnadu Reopen May Extendமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ரூ.60,000 சம்பளத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!

Schools in Tamilnadu Reopen May Extend
Schools in Tamilnadu Reopen May Extend
வறண்ட வானிலை

பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடும் வெயிலின் தாக்கத்தால் நீரிழப்பு, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அனைத்து பள்ளிகளையும் ஜூன் 10-ம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 3-வது வாரத்தில் திறக்க உத்தரவிட வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Comment