கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு; அறிவிப்பு, கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் – முழு விவரங்கள்..! kirama uthaviyalar 2024 notification

kirama uthaviyalar 2024 notification

கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு

kirama uthaviyalar 2024 notification தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வருவாய் அலகில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் (Village Assistants posst) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறித்தியுள்ளது .

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிக்கையில், 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் (Village Assistant) இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறித்தியுள்ளது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

ரூ.60,000 சம்பளத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!

kirama uthaviyalar 2024 notification
kirama uthaviyalar 2024 notification
kirama uthaviyalar 2024 notification
  • நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த் துறை
  • பணி: கிராம உதவியாளர்
  • காலியிடங்கள்: 2,299
  • தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • சம்பளம்: மாதம் ரூ.11,100 – 35,100
  • வயதுவரம்பு: 21 – 34க்குள் இருக்க வேண்டும்.
பணியின் சிறப்பம்சங்கள்
  • தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
  • வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

அரியலூர் – 21,சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி -33, மதுரை – 155, மயிலாடுதுறை – 13, நாகப்பட்டினம் – 68, நாமக்கல் – 68,பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 27, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை 43, சேலம் – 105,சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, தேனி-25, திருவண்ணாமலை – 103, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104. தூத்துக்குடி – 77, தென்காசி – 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31.

தேர்வு முறை 

திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சாண்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

திறனறிதல் தேர்வுவாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

 www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் விரைவில் ஆன்லைன் மூலம் துவங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு

Leave a Comment