தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு…! Important Information of School Reopening in Tamilnadu 2024

Important Information of School Reopening in Tamilnadu 2024

பொதுத் தேர்வு

தமிழ்நாட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் முன்கூட்டியே பள்ளிகளுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல் 1 முதல் 3ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும், 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

வங்கித் துறை வேலைவாய்ப்பு; 12th தேர்ச்சி போதும் – நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!

Important Information of School Reopening in Tamilnadu 2024
Important Information of School Reopening in Tamilnadu 2024

பள்ளிகள் திறப்பு

இதற்கிடையே தான் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பது தொடர்பான தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலை உள்ளது. அதோடு மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி என்ன? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. பொதுவாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜுன் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. லோக்சபா தேர்தல் முடிவு என்பது ஜுன் 4ம் தேதி வெளியாகிறது.

மேலும் மே 27 ல்  பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு மீண்டும் பள்ளி திறப்பு குறித்த வெளியாகும். வரும் ஜூன் 10ஆம் தேதி, தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 thought on “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு…! Important Information of School Reopening in Tamilnadu 2024”

  1. பள்ளிக்கூடம் திறக்கவே வேணாம். வெட்டி சம்பளம் கொடுத்தால் மட்டும் போதும்.
    பசங்க என்ன ஆனால் எங்களுக்கு என்ன?
    அதான் இருக்கவே இருக்கு தரும பாஸ்.

    Reply

Leave a Comment