தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா.. மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி..! Happy News on TN Schools Reopen Extends 2024 Check Full Details

Happy News on TN Schools Reopen Extends 2024

பொதுத் தேர்வு

தமிழ்நாட்டில் 10,12,11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடந்தது. 1 முதல் 3ஆம் தேதி வகுப்பு வரை ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரையும், ஏப்ரல் 2 முதல் 23ஆம் தேதி வரை 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதன்பிறகு, ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. 

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

TNPSC வேலைவாய்ப்பு; கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் – உடனே அப்ளை பண்ணுங்க..!

பள்ளிகள் திறப்பு

கடந்த 2023-24ஆம் கல்வியாண்டை பொறுத்தவரை 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல் வரும் 2024-25ஆம் கல்வியாண்டிலும் வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும் (TN Schools Reopen 2024).

Happy News on TN Schools Reopen Extends
Happy News on TN Schools Reopen Extends
வெயிலின் தாக்கம்

தற்போது ஒரு மாத காலமாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என்று கேள்விகள் எழுந்து வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தான் பள்ளிகளை திறப்பர். ஆனால், இம்முறை ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை இருக்கிறது. மேலும் மே 25க்கு பிறகு சில நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் மே 27 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

Leave a Comment