TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு..! Good News for TNPSC Group 2 Aspirants

Good News for TNPSC Group 2 Aspirants

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுகின்றன.ஆண்டுத்தோறும் தேர்வு அட்டவணையை வெளியிடும் தேர்வாணையம், ஒரு சில மாற்றங்களையும் அவ்வப்போது செய்து வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப்-2, குரூப்-2A பதவிகளுக்கு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வந்தது. குரூப்-2 பதவிகளுக்கு மட்டும் அடுத்ததாக நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

வேளாண் துறை வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும், தேர்வு கிடையாது – அப்ளை பண்ணுங்க சூப்பர் சான்ஸ்..!

Good News for TNPSC Group 2 Aspirants
Good News for TNPSC Group 2 Aspirants

முதன்மைத் தேர்வு 2 பதவிகளுக்கும் தனித்தனியாக நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் அறிவித்தது. மேலும் குரூப்-2 பதவிக்கான முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  குரூப்-2A பதவிக்கான முதன்மைத் தேர்வுக்கு புதிய பாடத்திட்டமும் www.tnpsc.gov.in/English/syllabus.html என்ற TNPSC இணையதளப் பக்கத்திலும் மற்றும் தேர்வுத் திட்டம் பற்றிய தகவல்களை www.tnpsc.gov.in/English/scheme.html என்ற இணையதளப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதே சமயம், குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில், தமிழ் தகுதி தாள் மட்டும் விரிவாக விடை அளிக்கும் வகையிலும், பொது அறிவு தாள் கொள்குறி முறையில் விடையை தேர்வு செய்யும் வகையிலும் புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், பொது அறிவுத்தாளில், 50 சதவிகித வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவு சார்ந்தும், 20 சதவிகித வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான கணக்கும், 30 விழுக்காடு வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் ஆண்டு திட்ட அட்டவணைப்படி, இரண்டாயிரத்து 30 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ-க்கான தேர்வு அறிவிப்பு ஜூன் 28 ஆம் தேதி வெளியாக வேண்டும்.

Leave a Comment