எஸ்பிஐ வங்கியில் 12 ஆயிரம் பணியிடங்கள்; வெளியான சூப்பர் அறிவிப்பு..! 12000 Vacancies in SBI Announcement Details

12000 Vacancies in SBI Announcement Details

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடந்த நிதியாண்டில் பெரும் லாபத்தை சேர்த்துள்ளது. இதனால், அந்த வங்கியின் பங்குகளும் பங்குச் சந்தைகளில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டு இருப்பதாக, தினேஷ் காரா கூறியுள்ளார். தற்போது எஸ்பிஐ வங்கியில் பொறியியல் பட்டதாரிகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தாலும், அது போதுமானதாக இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ 56,100 வரை..!

12000 Vacancies in SBI Announcement Details
12000 Vacancies in SBI Announcement Details

எனவே, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளில் தேவையான அளவுக்கு ஆட்களை சேர்க்க முடிவு செய்திருப்பதாகவும், அவர்களது திறமை, கல்வி பின்னணி, அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும், பொறியியல் பட்டதாரிகள் உள்பட சுமார் 12 ஆயிரம் பேரை எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாக, எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, தொழில்நுட்ப அனுபவம் முக்கிய அம்சமாக கருதப்படும் என்றும், வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடைமுறையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தினேஷ் காரா கூறியுள்ளார்.

பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்து வருவதால், வங்கியின் செயல்பாடுகளை திறன்பட நிர்வகிப்பதற்கு எஸ்பிஐ ஊழியர்கள், தொழில்நுட்ப அறிவை தொடர்ந்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்பதோடு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறையில் வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.

18 thoughts on “எஸ்பிஐ வங்கியில் 12 ஆயிரம் பணியிடங்கள்; வெளியான சூப்பர் அறிவிப்பு..! 12000 Vacancies in SBI Announcement Details”

Leave a Comment